Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உணவகங்களுக்கு ஷாக்! இன்று முதல் ரூ.3 ஆயிரத்தை நெருங்கும் வணிக சிலிண்டர் விலை!

உணவகங்களுக்கு ஷாக்! இன்று முதல் ரூ.3 ஆயிரத்தை நெருங்கும் வணிக சிலிண்டர் விலை!
Commercial LPG Cylinder Prices Hiked From October 1 Image: X

சென்னையில், 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை நேற்று முதல் ரூ.66.50 உயர்த்தப்பட்டு, ரூ.2,917-லிருந்து ரூ.2,983-ஆக உயர்ந்துள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

சென்னை:

சென்னையில், 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை ரூ.66.50 உயர்த்தப்பட்டு, ரூ.2,917-லிருந்து ரூ.2,983-ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு, வணிக ரீதியிலான எல்பிஜி-யை வழக்கமாகப் பயன்படுத்தும் ஹோட்டல்கள், உணவகங்கள், சாலையோர உணவுக் கடைகள் மற்றும் பிற நிறுவனங்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
பண்டிகைக் காலம் தொடங்கவுள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் வணிக சிலிண்டர்களின் விலை உயர்ந்துள்ளது. டெல்லியில், 19 கிலோ வணிகப் பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.62.50 அதிகரித்து ரூ.2,810-ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் இதன் விலை ரூ.2,748-ஆகவும், மும்பையில் ரூ.63 அதிகரித்து, சிலிண்டர் விலை ரூ.2,701-லிருந்து ரூ.2,764-ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.957.50-ஆக தொடர்கிறது.

முந்தைய செய்தி
கடந்த 25 ஆண்டுகளில் மிகவும் மோசமான செப்டம்பர்! எஃப்&ஓ தொடரில் 6.7% சரிந்த நிஃப்டி!
அடுத்த செய்தி
தொடர்ந்து 8 வாரங்கள் வீழ்ந்த நிஃப்டி

தொடர்புடைய செய்திகள்